ரத்தசோகை அபாயத்தால் கோழி உயிரிழப்பு..! விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்..!
ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலை பதிவுகள்
கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 68 டிகிரியாகவும் காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.
கோழிகளில் பரவும் ரத்தசோகை நோய்
கோழிகளை பரிசோதித்த தில், அவற்றில் பெரும்பாலும் இறக்கை அழுகல், ரத்தசேகை நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் கிருமிகள்
கோழிக்கு வழங்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ், ஈ கோலை போன்றவை இருப்பது தெரிவந்துள்ளது.
பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை
♦ கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தை பரிசோதனை செய்யவும்
♦ நுண்ணுயிர் கிருமிகள் உள்ள தீவனத்தை தவிர்க்கவும்
♦ தீவன மேலாண்மை முறைகளை முறையாக பின்பற்றவும்
♦ சந்தேகத்திற்கிடமான கோழிகளை உடனடியாக தனிமைப்படுத்தவும்
கோழிப்பண்ணையை தூய்மையாக வைத்திருக்கவும்
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கோழிகளிடையே ரத்தசோகை நோய் பரவுவதைத் தடுக்கலாம். பண்ணையாளர்கள் தங்கள் கோழிகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பண்ணையில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ரத்தசோகை நோய் பரவுவதைத் தடுக்க முடியும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பையும் தவிர்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu