திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா
X
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், துணை தாளாளர் சச்சின் ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசுகையில், அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு போன்ற மாண்புகள் நம்மிடையே வளரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாணவிகள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, தியாகத்தை நாடகமாக நடித்துக் காட்டினர். 15 மாணவிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைக் கூறி மகிழ்வித்தனர். மாணவிகளின் பாடல், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் அனைவருக்கும் கேக், இனிப்புகள் வழங்கப்பட்டன.

இளங்கலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி சஸ்மிதா மேரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி ஸ்ரீநிஷா வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இளங்கலை முதலாம் ஆண்டு வணிக நிர்வாகத்துறை மாணவி மஞ்சுளா நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story
ai solutions for small business