மணலி ஜேடா்பாளையத்தில் சாலை சீரமைப்பிற்கு ரூ. 41 லட்சம் ஒதுக்கீடு!
மணலி ஜேடர்பாளையத்தில் வெள்ளத்தால் பாதிப்பு
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணலி ஜேடர்பாளையத்தில் கனமழையின் காரணமாக வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. அப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா அண்மையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் விவரம், அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த ஆய்வின் போது மழையால் பாதிக்கப்பட்ட பெரிய மணலி ஊராட்சி, ஜேடர்பாளையம் சேர்வம்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், ஜேடர்பாளையம் தொடக்கப் பள்ளியில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆட்சியர் உத்தரவு
இதையடுத்து பெரியமணலி ஊராட்சி கனிமங்கள் மற்றும் சிறுகனிமங்கள் நிதியிலிருந்து ஜேடர்பாளையம் முதல் சேர்வம்பட்டி சாலை வரையிலான தார் சாலையை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கவும், பெரிய மணலி ஊராட்சி, ஜேடர்பாளையம் தொடக்கப் பள்ளியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும் மொத்தம் ரூ. 41 லட்சம் மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu