மீனுக்கு ஆசைப்பட்டு ஆற்றில் சிக்கிய வாலிபர்கள்: போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில், மீன்பிடிக்கச் சென்று சிக்கித் தவித்த 5 இளைஞர்களை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதி அருகே, அதே பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், இன்று மாலை பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சென்றனர்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் ஆகாய தாமரை செடிகள் அதிக அளவில் பரவி இருந்ததால், மீன் பிடித்துக் கொண்டு திரும்ப நினைத்துபோது, அந்த இளைஞர்கள் வழி தெரியாமலும் திரும்பிப் போக முடியாமல் தவித்தனர்.

நேரம் ஆக ஆக இருட்டிக் கொண்டே இருந்ததால், அக்கம்பக்கத்தினர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அவர்கள் வெப்படை தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கவே, அங்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.

ஒருமணி நேரம் போராடி, ஆகாய தாமரை செடிகளை விலக்கி, நடு ஆற்றில் தவித்துக்கொண்டிருந்த 5 இளைஞர்களையும் பத்திரமாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். ஆற்றில் இளைஞர்கள் சிக்கிக் கொண்ட இந்த நிகழ்வால் அகரகாரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. தீயணைப்புத்துறையினருக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் வீட்டில் தங்காமல் இதுபோன்ற்உயிருக்கு ஆபத்து ஏற்படும் காரியங்களை செய்யக்கூடாது என அவர்களுக்கு, தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!