ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை
X

ரியாஸ்கான்

பள்ளிபாளையம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். 22. செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, காவிரி ஆற்றின் பாலத்தின் மீது, தனது டூவேலரை நிறுத்தி விட்டு, காவிரி ஆற்றில் குதித்து உள்ளார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் வெப்படை மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போராடி வாலிபரின் உடலை மீட்டனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!