அரசு உதவி பெறும் கல்லூரியில் யோகா கருத்தரங்கம்

உலக யோகா தினமான நேற்று அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியும் ஈரோடு இதய நிறைவு தியான பயிற்சி மையமும் இணைந்து நடத்திய யோகா தியான பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா கருதரங்கம் நடந்தது.
உலக யோகா தினமான நேற்று அரசு உதவி பெறும் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியும் ஈரோடு இதய நிறைவு தியான பயிற்சி மையமும் இணைந்து நடத்திய யோகா தியான பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடந்தது.
ஈரோடு இதய நிறைவு தியான பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கவேலு, சுந்தரமூர்த்தி மற்றும் மாதேஸ்வரி கூறியதாவது:ஆழ்ந்த தியனத்தில் மனதை ஓய்வு நிலைக்கு ஆழ்த்தி சுத்திகரித்து பிரார்த்தனை செய்வதன்மூலம் மனம் ஒருநிலைப்பட்டு நாம் நினைத்ததை எளிதில் வெற்றி பெறமுடியும் எனவும் . ஹார்ட் புல்னெஸ் சுத்திகரிப்பு பயிற்சி, நம் மனக் குழப்பத்தை விடுவித்து, புதிய ஆரோக்கியமான வழக்கத்தை உருவாக்க நமக்கு உதவுகிறது. சுத்திகரிப்பு பயிற்சி செய்வதினால் நம் சொந்த பதிவுகள் நீங்குவது மட்டுமல்லாமல், சுற்றுப்புற சூழலின் நல்லிணக்கத்திற்கும் பங்களிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த யோகா தின விழா கருத்தரங்கில் சுமார் 358 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்து பயன்பெற்றனர் . இந்த தியான பயிற்சி செய்முறை விளக்கங்களும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அதிகாரி மீனாட்சிசுந்தராஜன், கனடா -இந்தியா கூட்டு பயிலகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நாட்டுநலப்பணி திட்ட அதிகாரி முருகவேல் மற்றும் துறைத்தலைவர்கள் செய்திருந்தனர். துணைத்தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன் மற்றும் இயக்குநர் நிர்மலா இளங்கோ, முதல்வர் பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu