நூல் முறுக்கு மெசின் உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு தீர்மானம்

கொங்கு மண்டல நூல் முறுக்கு மெசின்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது பொதுக்குழு கூட்டம் தலைவர் செந்தில்ராஜா தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்றது.
கொங்கு மண்டல நூல் முறுக்கு மெசின்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது பொதுக்குழு கூட்டம், சங்க தலைவர் செந்தில்ராஜா தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்றது. இதில் சங்க தலைவராக செந்தில்ராஜா, செயலராக லோகநாதன், பொருளராக பிரபாகரன் உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடித்தல், மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தல், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் வருகை குறித்து வரைமுறைப்படுத்த வேண்டும். முறுக்கு நூல் உற்பத்தியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல் முறுக்கு மெசின்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு பல வருடமாக போராடி வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வட்டாச்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ், குழு கடன் என பல இடங்களில் தொழிலாளர்கள் கடன் பெற்றதால், நிதி நிறுவனத்தினர் கடனை திரும்ப செலுத்தச் சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். தொழிற்சங்க நிர்வாகிகள் எவ்வளவோ சொல்லியும், நிதி நிறுவன நிர்வாகிகள் கேட்பதாக இல்லை. தொடர்ந்து நூல் முறுக்கு மெசின் தொழிலாளர்களை வற்புறுத்தி வருகின்றனர்.
மின் கட்டண உயர்வால் அனைத்து செலவினங்களும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவினங்கள் கூட செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இது அதிகாரிகள் கருத்தில் கொண்டு எங்களுக்கு கூலி உயர்வு வழங்கிட நடவடிகி துக்க வேண்டும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu