தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தினம்

தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தினம்
X

குமாரபாளையத்தில் தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் தேசிய மாணவர் படை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் தேசிய மாணவர் படை சார்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஈரோடு 15 ஆவது பட்டாலியன் கமாண்டிங் ஆபிஸர் ஜெய்தீப் லெப்டினன் கர்னல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுபேதார் மேஜர் சுரேஷ் ஆகியோர் ஆணையின்படி, பல்வேறு பள்ளி, கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியை எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தலைவர் இளங்கோ, துணைத்தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன் மேலும் கல்லூரியின் முதல்வர் பாலமுருகன், முருகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்கள். தேசிய மாணவர் படை அலுவலர்களான கேப்டன் நளினி, அந்தோணிசாமி , சிவகுமார், ரமேஷ் மற்றும் சத்தியகுமார் ஆகியோர் பங்கேற்றார்கள். தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் பிரபுதாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம், சிறப்பம்சங்கள், தினசரி யோகா செய்வதினால் ஏற்படும் மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம், பற்றி எடுத்துரைக்கப்பட்டது.



Tags

Next Story
ai in future agriculture