குமாரபாளையத்தில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் போலீசார் சார்பில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் போலீசார் சார்பில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி தேசிய மாணவர் படை மற்றும் குமாரபாளையம் காவல்துறை சார்பில் இணைந்து நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஐ. சந்தியா மற்றும் எஸ்.எஸ்.ஐ. அமல்ராஜ் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.

முருங்கைக்காய் காடு, பெராந்தர்காடு, காந்திபுரம், சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்கள் போட்டவாறு மாணவ, மாணவியர் சென்றனர். பொதுமக்களுக்கு இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.

மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழீ மற்றும் ஆசிரியர்கள் தகவல் தொடர்பு ஆசிரியர் கவிராஜ், பேரிடர் மேலாண்மை குழு பொறுப்பு ஆசிரியர் மகேஷ் குமார், சாரணிய இயக்க ஆசிரியர் மாலதி, வசந்தி, அன்புக்கரசி, அப்பாதுரை ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture