அரசு பள்ளியில் உலக காற்று தின கருத்தரங்கம்

அரசு பள்ளியில் உலக  காற்று தின கருத்தரங்கம்
X

குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் மற்றும் உலக காற்று தினம் கருத்தரங்கம் நடந்தது.

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக காற்று தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக காற்று தினம் கருத்தரங்கம் நடந்தது.

குமாரபாளையம் அருகே உள்ள வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் மற்றும் உலக காற்று தினம் ஆகிய சிறப்பு தினங்களையொட்டி, பிளாஸ்டிக் மாசுபாட்டை தவிர்ப்போம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ஜூன் 5ந்தேதி ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜூன் 15ஆம் தேதி உலக காற்று தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விரு தினங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழியினால் உண்டாகும் மாசுபாட்டை தவிர்ப்போம் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஆசிரியர் மா. மாதேஷ் க. ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் குமார் நெகிழி மாசுபாட்டைத் தவிர்ப்போம் என்னும் தலைப்பில் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்து, ஆசிரியர்கள் மாதேஷ் ராதா, முருகேசன், தங்கராஜ், கீதாமாதேஸ்வரி, அருள்மணி பங்கேற்றனர். மாணவர்கள் காளியண்ணன், கோபி, அனன்யா, இலக்கியா, மகிப்பிரியா ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். கருத்தரங்கின் நிறைவில் ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




Tags

Next Story
ai in future agriculture