குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு
X
குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி பலியானார்.

குமாரபாளையம் அரசு மேல்நிலைபள்ளி சாலையில் வசிப்பவர் நந்தகுமார், 45.கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருடன் இவரின் அம்மா சவுண்டம்மாள் வசித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது. ஜூன் 5ல் குடித்து விட்டு வந்த மகனை அம்மா திட்டியதாக கூறப்படுகிறது. அதே நாளில் மாலை 03:00 மணியளவில் மதுவுடன், காட்டிற்கு அடிக்கும் மருந்து சேர்த்து குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழ, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 07:15 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
the future of ai in healthcare