ஆர்.டி.ஓ.வுக்கு விருது வழங்கிய மக்கள் நீதி மைய மகளிரணியினர்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில், சிறப்பாக பணியாற்றி வரும் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தியின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் சிறந்த சேவையாற்றி வரும் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ.சுகந்திக்கு மகளிர் தினத்தையொட்டி ஷீல்டு வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்தி வந்தது முதல், கோரிக்கை விடுக்கும் நபர் யாராக இருந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த செயல் அனைவருக்கும் மன நிறைவை தருவதாக உள்ளது. இவரது சேவையை பாராட்டி, நாமக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. சுகந்திக்கு நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள் உஷா, சுஜாதா, விமலா, மல்லிகா, தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், கனரக வாகனங்கள் நுழைய குறிப்பிட்ட நேரத்தில் இடைப்பாடி சாலை உள்ளிட்ட நகர எல்லைப்பகுதியில் அனுமதி மறுக்க கோரியும், மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் தவமணியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பள்ளியிலிருந்து வெளியே வரும் நேரத்தில் வழியில் நின்று கொண்டு பசங்க கேலி, கிண்டல் செய்வதாக மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இதேபோல் ராஜம் தியேட்டர் அருகில், பள்ளிப்பாளையம் பிரிவு சாலைகளில் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆகையால் பள்ளி துவங்கும் நேரம் காலை 08:00 மணி முதல் 09:30 மணி வரை மற்றும் பள்ளி முடியும் நேரம் மாலை 04:00 மணி முதல் 05:00 மணி வரை மாணவிகளின் பாதுகாப்புக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். எடப்பாடி சாலையில் காலை 08:00 மணி முதல் மணி முதல் 09:00 மணிவரை மற்றும் மாலை 04:00 மணி முதல் 05.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் குறைக்க கனரக வாகனங்கள் வருவதற்கு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu