குமாரபாளையத்தில் கேன்சரால் மூதாட்டி பலியானது பற்றி போலீசார் விசாரணை

X
பைல் படம்.
By - K.S.Balakumaran, Reporter |19 Jun 2022 5:00 PM IST
குமாரபாளையம் அருகே -கேன்சரால் மூதாட்டி பலியானதால் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு, குமரன் நகரில் வசித்து வந்தவர் குருவாயி(வயது80. ).இவருக்கு மார்பக புற்று நோய் இருந்துள்ள நிலையில் நேற்று காலையில் இறந்தார். இவருக்கு ஊசி போட்டு உயிர் போக வைத்துள்ளனர் என புகார் பரவியது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். இது வெறும் புரளி என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu