வடக்கு, தெற்கு என நிர்வாகிகள் நியமனம் அதிமுகவில் நடைமுறைக்கு வருமா ?

அதிமுக தலைமை அலுவலகம்(பைல் படம்)
குமாரபாளையத்தில் வடக்கு, தெற்கு என நிர்வாகிகள் நியமனம் அ.தி.மு.க.வில் வருமா ? என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
அரசியல் கட்சிகளில் வடக்கு நிர்வாகிகள், தெற்கு நிர்வாகிகள், கிழக்கு நிர்வாகிகள், மேற்கு நிர்வாகிகள் என நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரசார பணிகள் துரிதப்படுத்தவும், கட்சியின ருக்கு பதவிகள் கொடுக்கவும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குமாரபாளையத்தில் முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகள் இது போல் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. வில் இது போல் நியமனம் செய்யப்படுமா? என நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். நான்தான் வடக்கு, அவர்தான் தெற்கு என அவர்களுக்குள் புகைந்து வருகிறது. தலைமையின் உத்தரவை ஆவலுடன் தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கட்சி வளர்ச்சிக்காக கடந்த 2020 -ல் பல்வேறு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச்செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சில மாவட்டங்களை, கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு செயலர்கள் நியமிக்கப்பட்டனர்.
கட்சி அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சிப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் கட்சித்தலைமை அறிவித்தது. மேலும், கட்சி மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றி வருவார்கள் எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக நிர்வாகத்தை பிரித்து புதிய நிர்வாகிகளை நியமித்து அதிகாரப்பரவலாக்கம் செய்ய கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu