நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நெசவாளர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நெசவாளர் தின விழா கொண்டாட்டம்
X
குமாரபாளையத்தில் நெசவாளர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நெசவாளர்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆக. 7 நெசவாளர் தின விழா கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை என்பதால் குமாரபாளையம் பகுதியில் அனைத்து நெசவு கூடங்களும் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் இந்த விழா குமாரபாளையம் காவேரி நகர் மற்றும் வேதாந்தபுரம் பகுதியில், அகில இந்திய தேவாங்கர் எழுச்சி இயக்க மாவட்ட செயலர் வீனஸ் பாலு தலைமையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு இனிப்புகள், முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து ஆகியன வழங்கப்பட்டன.

நெசவு தொழிலில் ஈடுபட்டமைக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டன. சிறுவர் சிறுமியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மணிகண்டன், சவுண்டப்பன், சாந்தி, சங்கீதா, ஹேமலதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு