குமாரபாளையம் 14வது வார்டில் தண்ணீர் 'கட்': கவுன்சிலரிடம் மக்கள் சரமாரி கேள்வி

குமாரபாளையம் 14வது வார்டில் தண்ணீர் கட்: கவுன்சிலரிடம் மக்கள் சரமாரி கேள்வி
X

குமாரபாளையம் 14வது வார்டு, கிழக்கு சந்தை தெருவில் போர்வெல் பைப் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அமைக்கப்பட்ட பைப் துண்டிக்கப்பட்டு, கழிப்பிடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

தோல்வி என்றால் தண்ணீரை நிறுத்தி விடுவீர்களா? என குமாரபாளையத்தில் முன்னாள் கவுன்சிலரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்டனர்.

குமாரபாளையம் 14வது வார்டு, கிழக்கு சந்தை தெருவில் 2017,18ம் ஆண்டில் ஈரோடு எம்.பி. நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு தினமும் போர்வெல் நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

சில நாட்களாக இப்பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுந்ததால், இது பற்றி அப்பகுதி முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர துணை செயலருமான திருநாவுக்கரசிடம் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ருநாவுக்கரசு கூறுகையில், எனது வார்டில் குமாரபாளையம் 14வது வார்டு, கிழக்கு சந்தை தெருவில் 2017ம் ஆண்டில் ஈரோடு எம்.பி. நிதியில் 3 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு தினமும் போர்வெல் நீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

சில நாட்களாக இப்பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுந்ததால் என்னிடம் வந்து, தேர்தலில் தோற்றால் எங்களுக்கு தண்ணீர் விடாமல், பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்திற்கு திருப்பி விட்டு விடுவீர்களா? என்று கேட்டனர். நான் ஏதும் புரியாமல் டேங்க் உள்ள இடத்திற்கு வந்து பார்த்தபோது, போர்வெல் பைப் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய அமைக்கப்பட்ட பைப் துண்டிக்கப்பட்டு, கழிப்பிடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த வார்டில் இவரது சார்பில் அவருடைய அண்ணன் மகள் ரேவதி போட்டியிட்டு வெற்றி பெறவில்லை.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil