வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
குமாரபாளையத்தில் தாலுக்கா அளவிலான ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு மெசின்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், பூத் சிலிப் வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தினர். குமாரபாளையம் தொகுதியில் ஓட்டுக்கள் பதிவு செய்யக்கூடிய ஈ.வி.எம். மெசின்கள், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சில நாட்கள் முன்பு இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் வந்து,மெசின்கள் வைக்கப்பட்ட அறைகளை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
குமாரபாளையம் தொகுதியில் 279 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் பயன்படுத்த கண்ட்ரோல் யூனிட் 334, பேலட் மெசின் 334, வி.வி.பேடு 362, பாதுகாப்பு அறையில், மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்ட நிலையில் நேற்று அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டன. தாசில்தார் சண்முகவேல், உள்பட பலர் உடனிருந்து அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு மெசின்கள் கொண்டு செல்ல வாகனங்கள் தாலுக்கா அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu