ஓட்டுப்பதிவு தீவிரம்! ஓட்டுச்சாவடியில் மூதாட்டி மயக்கம்
படவிளக்கம் : லோக்சபா தேர்தலையொட்டி குமாரபாளையம் சி.எஸ்.ஐ. பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
ஓட்டுப்பதிவு தீவிரம்! ஓட்டுச்சாவடியில் மூதாட்டி மயக்கம்!
குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஓட்டுச்சாவடியில் மூதாட்டி மயக்கமடைந்தார்.
லோக்சபா தேர்தல் நேற்று குமாரபாளையத்தில் நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக தேர்தல் பணிகளை துவக்கினர். அந்தந்த கட்சிகளுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்களும் பிரச்சாரம் செய்தனர். குமாரபாளையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ, பா.ஜ.க. கூட்டணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன், தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, திரைப்பட இயக்குனர் உதயகுமார், நடிகர்கள் அனுமோகன், ரங்கநாதன் உள்பட பலர் பங்கேற்று பிரச்சாரம் செய்தனர். போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், உள்பட பலரும் விழிப்புணர்வு பேரணி, 100 சதவீத வாக்களிக்க கோரி துண்டு பிரசுரம் விநியோகம், ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணிகள் செய்து தருதல், நகைக்கடை, டாஸ்மாக் கடை கண்காணிப்பளர்கள், பார் உரிமையாளர்கள் ஆகியோரை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனை வழங்கப்பட்டது.
ஏப். 17ல் பிரச்சாரம் நிறைவு பெற்ற நிலையில், நேற்று, லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், வெயிலின் தாக்குதலால், மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்தார். அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து, உட்கார வைத்து, இயல்பு நிலை வந்ததும் ஓட்டுப்பதிவு செய்தார்.
போதுமான அளவில் சாமியாணா போட்டிருந்த நிலையிலும், இந்த சம்பவத்திற்கு பிறகு மேலும் ஒரு சாமியாணா அமைக்கப்பட்டது. மாலை 06:00 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அனைவரும் ஓட்டுப்பதிவு செய்த பின், மெசின்கள் சீல் வைக்கப்பட்டது. தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுப்பதிவு மெசின்களும் இதர கருவிகளும் ஓட்டு எண்ணிக்கை நடக்கவிருக்கும், ஈரோடு, ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu