குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா
X

குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, ஆசிரிய பெருமக்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த விழாவில் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தீனா, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த விழாவில் வ.உ.சி. மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகி சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற் சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.




Tags

Next Story
ai in future agriculture