விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்!

விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்!
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையத்தில் விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் விநாயகர், முருகர் கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

குமாரபாளையம், ராஜாஜி குப்பம், வலம்புரி விநாயகர், அறுபடைவீடு பாலசெல்வகுமரன் ஆலயங்கள் கும்பாபிஷேக விழா நேற்று காலை முகூர்த்தகால் நடுதலுடன் துவங்கியது. காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை அணிந்தவாறு பெண் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்க, தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. நேற்று இரவு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. இன்று காலை 05:00 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளது. இதனையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதில் குமாரபாளையம் ஆனந்தாஸ்ரம குரு முதல்வர் பூர்னானந்தா சரஸ்வதி சுவாமிகள், வேதாந்த சிந்தன சாது சமாஜ ஆஸ்ரம குரு முதல்வர் சித்ருபானந்த சுவாமிகள், உள்பட பலர் பங்கேற்கவுள்ளனர். கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் வீதி முழுதும் வாழைமர தோரணங்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!