பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம்

பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு    ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம்
X

பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல்,

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையத்தில், கோட்டை பகுதியில், ஸ்ரீ நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித்தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார். இன்று பங்குனி மாதம், சனிக்கிழமை மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, காலை 9 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள் சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிசேகத்துடன் அபிசேகம் நிறைவு பெற்றது. தொடர்ந்து சுவாமிக்காக உருவாக்கப்பட்ட, தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் 1 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story
ai in future agriculture