அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை நல்லடக்கம் செய்ய வி.ஏ.ஒ. மனு

அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை நல்லடக்கம் செய்ய வி.ஏ.ஒ. மனு
X
குமாரபாளையம் காவல் நிலையம்.
அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை நல்லடக்கம் செய்ய வேண்டி குமாரபாளையம் போலீசில் வி.ஏ.ஒ. மனு கொடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் நிலையம் பகுதியில் யாசகம் பெற்று வந்த அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க நபர், உடல் நலமில்லாமல் இருந்ததால் சில நாட்கள் முன்பு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். இவர் சிகிச்சை பலனின்றி மே. 20ல் இறந்தார். பல பகுதிகளில் விசாரித்தும், இதுவரை இவரை தேடி யாரும் வராததால், வி.ஏ.ஒ. செந்தில்குமார் இவரது உடலை நல்லடக்கம் செய்திட வேண்டி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இவரது உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Tags

Next Story