தடுப்பூசி போடாவிட்டால் கடை, வணிக நிறுவனங்களுக்கு சீல்: அரசு அதிரடி

தடுப்பூசி போடாவிட்டால் கடை, வணிக நிறுவனங்களுக்கு சீல்: அரசு அதிரடி
X

கோப்பு படம்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களின் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என்று, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறியதாவது: குமாரபாளையத்தில் அக். 23ல் கொரோனா தடுப்பூசி முகாம் 18 மையங்களிலும், 4 நடமாடும் வாகனங்களிலும் முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுனர்கள், டூரிஸ்ட் கார் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், டெம்போ ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், இதர வாகன ஓட்டுனர்கள், நகரில் உள்ள அனைத்து வணிக நிறுவன, அனைத்து விசைத்தறி நிறுவன, இதர நிறுவன உரிமையாளர்கள், பணியாளர்கள், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.


அக். 23க்கு மேல், நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கும் ஆய்வுக்கு வருவார்கள். அப்போது இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களை, கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டாவிட்டால், அந்த நிறுவனத்தை மூடி, சீல் வைக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை 100 சதவீதத்தை அடைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!