குமாரபாளையத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு  தடுப்பூசி முகாம்
X

குமாரபாளையத்தில் திருநங்கைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது

திருநங்கைகளுக்கு குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவித்த போது பலரும் அலட்சியம் காட்டினார்கள். அதன் அத்தியாவசியம் தெரிந்த பின் தற்போது இரவு, பகலாக வரிசையில் நின்று இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இதய நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய் உள்ளவர்கள், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்ட பல வகையினர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் திருநங்கைகளுக்கு மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் குமாரபாளையத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று தடுப்பூசி போட்டுகொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு