வாடகைக்கு வீடு! மூதாட்டி கழுத்தை நெறித்து எட்டு பவுன் சங்கிலி பறிப்பு!

வாடகைக்கு வீடு! மூதாட்டி கழுத்தை நெறித்து எட்டு பவுன் சங்கிலி பறிப்பு!
X
பள்ளிபாளையம் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த இரண்டு பெண்கள் மூதாத்தியின் கழுத்தை நெறித்து எட்டு பவுன் சங்கிலி பறித்து சென்றனர்.

வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த இரு பெண்கள் மூதாட்டி கழுத்தை நெரித்து எட்டு பவுன் சங்கிலி பறிப்பு

பள்ளிபாளையம் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்த இரண்டு பெண்கள் மூதாத்தியின் கழுத்தை நெறித்து எட்டு பவுன் சங்கிலி பறித்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. நூற்பாலை அதிபரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். தற்பொழுது வீட்டில் அவரது மனைவி பழனியம்மாள் வசித்து வருகிறார். பழனியம்மாள் சில வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீடு வாடகைக்கு கேட்டு வந்த இரண்டு பெண்கள் பழனியம்மாளிடம் நீண்டகாலம் பழகியவர்கள் போல் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென பெண்கள் பழனியம்மாளின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். அதிர்ச்சியில் இருந்து மீண்ட பழனியம்மாள் கத்தி கூச்சிலிடவே, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து பழனியம்மாளிடம் விசாரித்து, பிறகு பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பழனியம்மாள் கழுத்தில் இருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம பெண்கள் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!