குமாரபாளையம் அருகே டூவீலர்- லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர்- லாரி மோதிய  விபத்தில் இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன்.


குமாரபாளையம் அருகே டூவீலர்- லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் :

குமாரபாளையம் அருகே டூவீலர், லாரி மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், (29). மேட்டுப்பாளையம், காரமடையை சேர்ந்தவர் பாலமுருகன், (17). இருவரும் வெப்படை அருகே ஸ்பின்னிங் மில் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். குமாரபாளையத்திற்கு வேலைக்கு சென்று வர பைக்கில் செல்வது வழக்கம். சம்பத்தன்றும் நந்தகுமார் பைக் ஓட்ட, பாலமுருகன் பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

காவடியான்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பியபோது வேகமாக எதிரே வந்த லாரி மீது பைக் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!