குமார பாளையம் அருகே டூவீலரில் நகை பறிக்க முயன்ற இருவர் கைது

குமார பாளையம் அருகே  டூவீலரில் நகை பறிக்க முயன்ற இருவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் அருகே ஓடும் டூவீலரில் நகை பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (வயது33,). விவசாயி. இவரது மனைவி சுதா. இவர்களது மகன் தேவ் ஆதித்தன்(வயது 3.) நேற்று நல்லாம்புளியூரில் உள்ள கோவிலில் தங்களது குழந்தைக்கு முடி காணிக்கை கொடுத்து விட்டு, குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி அருகே நேற்று மாலை 01:30 மணியளவில் டூவீலரில் பாலசுப்ரமணியம் ஓட்ட, மனைவி, மகன் பின்னால் அமர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

இவர்களின் அருகே நம்பர் பிளேட் இல்லாத யமஹா டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவரில் பின்னால் உட்கார்ந்த நபர் சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை பறிக்க முயன்றார். பாலசுப்ரமணி வாகனத்தை ஓரமாக நிறுத்த அவர்களால் நகையை பறிக்க முடியவில்லை. பாலசுப்ரமணி சத்தம் போட, அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவர்களை பிடித்தனர். விசாரணையில், வண்டி ஓட்டி வந்தவன் சேலம் மாவட்டம், வெள்ளைக்கல்பட்டியை சேர்ந்த வினோத்,( 21,) என்பதும், பின்னால் உட்கார்ந்து வந்தவன் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார்,( 20, )என்பதும் தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் இரு நபர்களை கைது செய்ததுடன், அவர்கள் வந்த டூவீலரையும், இரண்டு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil