அரசு விடுதி திறப்பு விழா: இரு எம்.பி.க்கள் பங்கேற்பு

அரசு விடுதி திறப்பு விழா:  இரு எம்.பி.க்கள் பங்கேற்பு
X

குமாரபாளையத்தில் நடத்த அரசு விடுதி திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் உமா குத்துவிளக்கேற்றினார்.ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர்  பங்கேற்றனர்

குமாரபாளையம் அரசு விடுதி திறப்பு விழாவில் ஆட்சியர் மற்றும் இரண்டு எம்.பி.க்கள் பங்கேற்றனர்

குமாரபாளையம் பகுதியில் தமிழக அரசு சார்பில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதியினை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி அருகில் தமிழக அரசு சார்பில், அரசினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி, 100 மாணவர்கள் தங்கக்கூடிய வகையில் புதிதாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என 885 ச.மீ. அளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் மின்னனு நூலகம், உடற்பயிற்சி கூடம்,உணவுக்கூடம் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் கட்டப்பட்ட கட்டிடத்திணை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன் பின் விடுதி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். பின்னர் விடுதி வளாகத்தினை பார்வையிட்டனர். இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜயகண்ணன், விடுதி காப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.





Tags

Next Story
ai in future agriculture