குமாரபாளையம் அரசு கல்லூரி மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை

குமாரபாளையம் அரசு கல்லூரி மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை
X

குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணாக்கர்களுக்கு நடந்த இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறையை கல்லூரி முதல்வர் ரேணுகா துவக்கி வைத்தார்.  

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறையில் முதுகலை மாணாக்கர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை நடந்தது.கல்லூரி முதல்வர் ரேணுகா பங்கேற்று பயிற்சிப் பட்டறையை துவக்கி வைத்தார்.

முதல்வர் ரேணுகா பேசியதாவது:

தமிழக அரசு சார்பில், அரசு கல்லூரி மாணவர்கள் பயன்பெற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் இந்த பயிற்சி பட்டறை நடக்கிறது. இந்த பயிற்சி பட்டறையில் மிகுந்த கவனத்துடன் பயின்று, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிறந்து விளங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி பேராசிரியர்கள் சிவபெருமாள், லெனின் ஆகிய இருவரும் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் இரகுபதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பட்டறையில் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags

Next Story
பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல் தொடக்கம் !