டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது

டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது! திண்டுக்கல் சென்று கைது செய்த போலீசார் குமாரபாளையத்தில் டூவீலரில் வந்து பெண்ணின் நகையை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதி சேர்ந்தவர் சந்திரசேகர், 49. இவரது மனைவி சுமதி,45. ஜவுளி தொழில். பிப். 15ல் வங்கியிலிருந்து காந்திபுரம் பகுதியில் வீட்டுக்கு திரும்ப வந்த போது, டூவீலரில் ஹெல்மெட் போட்டபடி வந்த மர்ம நபர்கள் சுமதியை தாக்கி, அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மறைந்தனர். இது குறித்து சுமதியின் கணவர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

தமிழக முழுவதும் வழிப்பறியில் ஈடுபட்டு தற்பொழுது பிணையில் உள்ள கைதிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, மதுரையைச் சார்ந்த சதீஷ், 24 மற்றும் காக்கா முட்டை என்கிற அலெக்ஸ் பாண்டியன், 24, ஆகியோர் மீது சந்தேகம் ஏற்படவே, இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக ஆஜராவதற்கு இருவரும் வருவார்கள் என்று ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில், குமாரபாளையம் போலீசார் திண்டுக்கல் நீதிமன்றம் அருகே காத்திருந்தனர்.

அப்பொழுது இருவரும் பேருந்திலிருந்து இறங்கியதும் கைது செய்து விசாரித்ததில், குமாரபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்கள் இருவரையும் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் திண்டுக்கல்லில் பல இடங்களில் வழிப்பறி செய்த நகைகளை விற்பதற்காக திருப்பூர் வரும்பொழுது, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் செயினை பறித்து சென்றதையும், குமாரபாளையம் கிழக்கு காந்திபுரம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்த சுமதியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றதையும், மேலும் ராசிபுரம் பகுதியில் ஒரு மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!