குமாரபாளையத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த இருவர் கைது

Salem Rowdy
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர், குமாரபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பஸ் ஸ்டாண்ட் பின்புற பகுதியில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை நடந்தது தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் மது விற்ற நபரை கையும், களவுமாக பிடித்து, அவரிடமிருந்து 65 மது பாட்டில்கள், மது விற்ற பணம் 4 ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர் பவானி, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் அரவிந்த், 27, என்பது தெரியவந்தது.
இதே போல் ஆனங்கூர் ரோடு, வீ.மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார், வீட்டில் விற்பனை செய்து வந்த செங்கோடன், 70, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இரு வழக்குகளும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu