அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது: 225 மது பாட்டில்கள் பறிமுதல்

அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது:   225 மது பாட்டில்கள் பறிமுதல்

கோப்பு படம்

குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டு, 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் பள்ளிபாளையம் சாலை, மாரக்காள்காடு, விட்டலபுரி ஆகிய பகுதிகளில் மது விற்பது தெரியவந்தது.

நேரில் சென்ற போலீசார் மாரக்காள்காடு பகுதியில் மது விற்ற நாகராஜ், 56, என்பவரை கைது செய்து 25 மது பாட்டில்களையும், விட்டலபுரி பகுதியில் மது விற்ற மோகன், 55, என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து 200 மது பாட்டில்களும், ஆக மொத்தம் 225 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தலைமறைவான மீனாட்சிசுந்தரம், ரங்கன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது:

அரசு அனுமதியில்லாமல் மது விற்க கூடாது என பலமுறை எச்சரித்தும், பார் உரிமையாளர்கள் கண்டுகொள்வது இல்லை. விதி மீறும் பார் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story