போலி லாட்டரி, மது விற்ற இருவர் கைது

போலி லாட்டரி, மது விற்ற இருவர்  கைது
X
குமாரபாளையத்தில் போலி லாட்டரி, மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

போலி லாட்டரி, மது விற்ற இருவர் கைது

குமாரபாளையத்தில் போலி லாட்டரி, மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையத்தில் போலி லாட்டரி மது ஆகியவை அதிகம் பல பகுதிகளில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், சந்தியா, எஸ்.எஸ்.ஐ. அமுல்ராஜ், முருகேசன், குணசேகரன், டேவிட், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் எதிரில், கல்லங்காட்டுவலசு ஆகிய இடங்களில் மது பாட்டில்கள், போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக தனசேகர், 33, பெரியசாமி, 37, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து தலா ஐந்து மது பாட்டில்கள், வெள்ளை துண்டு சீட்டில் மூன்று எண்கள் எழுதப்பட்ட போலி லாட்டரி சீட்டுக்கள் ஐந்து எண்ணிக்கை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!