ஈரோடு கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரண்

ஈரோடு கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரண்
X

ஈரோடு கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

ஈரோட்டில் நடந்த கொலை வழக்கில் தொடர்பு டைய குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

ஈரோடு கொலை வழக்கு குற்றவாளிகள் இருவர் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சில நாட்கள் முன்பு கொலை சம்பவம் நடந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஈரோடு அக்ரஹாரம், மறவம்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, 38, மணிகண்டன், 32. ஆகிய இருவரும் நேற்று மாலை குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் வாலிபர் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடை அருகே வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் நேற்று தனி ராவுத்தர் குலம் பகுதியில் காந்திநகர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருகில் உள்ள பாரில் மது அருந்தி உள்ளார்.

அந்த பாரில் ஏற்கெனவே ஈரோடு பி. பெ. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜின்னா (30) என்பவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மாது குடித்துக்கொண்டிருந்துள்ளனர். சந்தோஷ் மது அருந்திவிட்டு டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்த போது ஜின்னா மற்றும் அவருடன் இருந்த நான்கு பேர் சந்தோஷை வழிமறித்து அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்குள் ஏற்கெனவே முன் விரோதம் இறந்த காரணத்தால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முத்திய நிலையில் ஜின்னா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷம் வயிற்றுப் பகுதியில் பலமாக குத்தியுள்ளார்.

இதனை அடுத்து சந்தோஷ் நிலை குனிந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சந்தோஷ் உயிரிழந்து விட்டதை உறுதி செய்த பின்பு ஜின்னா மற்றும் அவருடன் இருந்த நான்கு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவு ஆகிவிட்டனர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோடு அக்ரஹாரம், மறவம்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா, 38, மணிகண்டன், 32. இவர்கள் இருவரும் நேற்று மாலை குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்

Tags

Next Story
ai in future agriculture