குமாரபாளையம் தாலுகாவில் ரேஷன் கடைகளில் டி.எஸ்.ஒ. ஆய்வு

குமாரபாளையம் தாலுகாவில் ரேஷன் கடைகளில் டி.எஸ்.ஒ. ஆய்வு
X

பைல் படம்.

குமாரபாளையம் தாலுக்காவில் உள்ள ரேசன் கடைகளில் டி.எஸ்.ஒ. ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் தாலுக்காவில் உள்ள ரேசன் கடைகளில் டி.எஸ்.ஒ. ஆய்வு செய்தார்.

இதுகுறித்து டி.எஸ்.ஒ. வசந்தி கூறுகையில், குமாரபாளையம் தாலுக்காவில் 105 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவைகளில் பொங்கல் பொருட்கள் தமிழக அரசு உத்திரவின் படியும், மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படியும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் காளியம்மன் கோவில், வேதாந்தபுரம், பெராந்தார் காடு, பாலக்கரை, காவேரி நகர், பள்ளிபாளையம், எலந்தகுட்டை, வெப்படை, கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து இடங்களிலும் பொங்கல் இலவச பொருட்கள் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

ஆர்.ஐ. ராஜன் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!