குமார பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தெலுங்கானாவில் மர்ம சாவு

குமார பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தெலுங்கானாவில்   மர்ம சாவு
X
குமார பாளையம் காவல் நிலையம் (பைல் படம்).
குமார பாளையத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் தெலுங்கானாவில் மர்மமான முறையில் இறந்ததாக தகவல் வந்து உள்ளது.

குமாரபாளையம் அருகே உள்ள காவடியான்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 37.) லாரி ஓட்டுனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு லாரி வாடகைக்கு போக வேண்டும் என வீட்டில் கூறி சென்றுள்ளார். அவரிடமிருந்து சில நாட்களாக எவ்வித போனும் வரவில்லை என தெரிகிறது. இவரது உடன் சென்ற திருச்செங்கோட்டை சேர்ந்த மீசைக்காரர் என்ற மற்றொரு ஓட்டுனரை கேட்டதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில், டீ குடிக்க லாரியை நிறுத்தினோம். ஆனால் நான் வெளியில் போய் விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை என்றார்.

இது குறித்து அப்பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் வனப்பகுதியில் இறந்து 15 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் சரவணன் உடல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது, குடும்பத்தினர் உறவினர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil