பணியின் போது உயிரிழந்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி

குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீயணைப்பு படையினர் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆண்டுதோறும் ஏப். 14ல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
மாநில அளவில் தீயணைப்பு பணியின் போது உயிரிழந்தவர்கள் பெயர் பட்டியலுடன், தீயணைப்பு வீரர் போல் உருவ பொம்மை அருகே வைக்கப்பட்டிருந்தது. நிலைய அலுவலர் மற்றும் மற்ற தீயணைப்பு படையினர் மலர் வளையம் வைத்து, மலரஞ்சலி செலுத்தியதுடன், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிலைய அலுவலர் தண்டபாணி பேசியதாவது: தீயணைப்பு பணி ஆபத்து நிறைந்தது என்றாலும், சவாலுடன் எதிர்கொண்டு நாம் அனைவரும் பணியாற்றி வருகிறோம். தீயணைக்கும் பணியின் போது இறந்தவர்களின் பட்டியல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதற்கு மேலும் நீடிக்க கூடாது என்பது என் விருப்பம். பொதுமக்களுக்கு சேவை செய்வோம். எச்சரிக்கையுடன் பணியாற்றுவோம்.
கன மழையின் காரணமாக குமாரபாளையம் பல பகுதியில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதேபோல் கத்தேரி சமத்துவபுரம் பகுதியில் மழை நீர் புகுந்து, வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நேரில் சென்று 35 நபர்களை மீட்டோம்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. பலமுறை கேட்டும் இதுவரை மின்விளக்கு வசதி செய்து தரவில்லை. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீயணைப்பு படையினரும் பலமுறை வந்து பாம்பு பிடிக்கச் செல்கின்றனர்.
குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. நேரில் வந்த இவர்கள் டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் அப்பகுதியில் இரவிலும் தேடி வந்தோம். இதனை நாங்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டு விட்டோம்.
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான நூல் ஆலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தோம். இது போல் பல்வேறு சம்பவங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காத்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் பொதுமக்களும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu