குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட அப்துல் கலாம் அமைப்பினர்

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட  அப்துல்  கலாம் அமைப்பினர்
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில்,  அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில்,  10 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல் கலாம் அமைப்பினர் சார்பில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்ற விழாவில், 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!