சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு

குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு
குமாரபாளையத்தில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட நேரிட்டது
குமாரபாளையம் சேலம் சாலை பழைய காவேரி பாலம் முதல் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு வரை சுமார் மூன்று கி.மீ. தொலைவு உள்ளது.இதே போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை, எடப்பாடி சாலை ஆகியனவும் போக்குவரத்து மிகுந்த சாலைகளாகும். இந்த சாலைகளில் இரு புறமும் ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள கடைகளுக்கு லாரிகள் மூலம் சரக்குகள் வருகின்றன.
இவைகள் பகல் நேரத்தில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் சரக்கு இறக்குகிறோம் என்ற பெயரில், லாரிகளை நிறுத்தி, இதர வாகனங்கள் போவது குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இது போன்ற வாகனங்கள் மீது அபராதம், ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu