பள்ளிபாளையத்தில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிபாளையத்தில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
X

பள்ளிபாளையத்தில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளிபாளையத்தில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மாலை 6:30 மணி அளவில் திடீரென ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு காரணமாக பள்ளிபாளையம் பேருந்து நிலையம் முதல் சங்ககிரி செல்லும் சாலை வெடியரசம்பாளையம் வரை வாகனங்கள் தேங்கி நின்றது.

பள்ளிபாளையம் பாலத்தில் இருந்து ஈரோடு கருங்கல்பாளையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பள்ளிபாளையம் பழைய பாலம் முழுவதும், வாகனங்கள் தேங்கி நின்றதால் ஈரோட்டில் இருந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் புது பாலத்தின் வழியாக வருவதற்கு முயற்சி செய்ததால் எதிர்வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் முழுவதுமாக வாகனங்கள் எதிர் எதிர் திசையில் நின்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதுவது போல சென்றதால் வாகன ஓட்டிகள் இடையே ஆங்காங்கே கைகலப்பு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. அசாதாரண சூழல் நிலவியதால், பள்ளிபாளையம் போலீசார் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஊழியர்கள், தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாலை நேர பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பள்ளி,கல்லூரி முடித்து செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்குள்ளாகினர். வேறு வழி இல்லாமல் பேருந்துகளில் இருந்து இறங்கி தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.. இதனை அடுத்து இரவு 9 மணி அளவில் ஓரளவுக்கு போக்குவரத்து சீரானது .

மேம்பால பணிகள் முடியும் வரை போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தினம்தோறும் காலை மாலை நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி தரவேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
ai powered agriculture