பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்

பள்ளி பாளையத்தில்  மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள்
X

பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது

சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி பாளையத்தில் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் காவிரி ஆற்றுக்கு சாக்கடை கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள,பழைய சாக்கடை கால்வாய் இடிக்கப்பட்டு, தற்போது நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக சாக்கடை கால்வாய் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள சாக்கடை இடிக்கப்பட்டு, தற்போது அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் காவல் நிலைய சாலை உள்ளே ஆவரங்காடு பகுதி அதிக மக்கள் உள்ள பகுதி என்பதாலும், ஊரின் மையப் பகுதியாக இருப்பதாலும் அதிகளவு அவ்வழியே வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் திருச்செங்கோட்டில் இருந்து மாற்று பாதையில் வரும் வாகனங்கள், ஆவரங்காடு பகுதியில் இருந்து காவல் நிலையம் சாலை வழியாக ஈரோடு உள்ளிட்ட பிற ஊர்களுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே குறுகிய சாலையில், வாகனங்கள் எதிர்திசையில் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், சுபாஷ் நகர் பகுதி அருகே ஒரு வழி பாதையாக வாகனங்கள் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, திருச்செங்கோடு சாலையிலிருந்து வாகனங்கள் சுபாஷ் நகர் வழியாக சென்று பள்ளிபாளையம் காவிரி பாலம் அருகே உள்ள மாற்று வழியில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஈரோட்டில் இருந்து ஒரு வாகனங்கள் எப்போதும் போல காவல் நிலைய சாலையிலிருந்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு பெரும் பகுதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!