ஏய்ய்ய்ய்....தள்ளு தள்ளு தள்ளு......இதுதான் குமாரபாளையம் அரசு பஸ்ஸின் நிலை

ஏய்ய்ய்ய்....தள்ளு தள்ளு தள்ளு......இதுதான் குமாரபாளையம் அரசு பஸ்ஸின் நிலை
X

பழுதான டவுன் பஸ்.

குமாரபாளையத்தில் அரசு டவுன் பஸ்ஸை பொதுமக்கள் தள்ளி கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் சேர்த்தனர்.

அரசு டவுன் பஸ்கள் போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே நிறுத்தும் நிலை உருவாகி வருகிறது. இதனால் பயணிகள் பல இடங்களில் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 04:00 மணியளவில் பள்ளிபாளையத்திலிருந்து குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்த அரசு டவுன் பஸ், பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் திடீரென்று நின்று விட்டது. இதனையடுத்து பயணிகள் இறக்கி விடப்பட்டு, அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பழுதான டவுன் பஸ்ஸை பஸ் ஸ்டான்டிற்குள் தள்ளி கொண்டு வந்து சேர்த்தனர். இதனை கண்ட பலர் முகம் சுளித்தனர். அரசு டவுன் பஸ்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் போதிய பராமரிப்பு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்