குமாரபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் புகையிலை ஒழிப்பு பிரச்சாரம்

குமாரபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் புகையிலை  ஒழிப்பு பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற புகையிலை ஒழிப்பு பிரச்சார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி, ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் உள்பட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

குமாரபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரச்சாரம் நடந்தது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

ஜவுளி உற்பத்தியாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி பங்கேற்று, பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். புகையிலை பாக்கெட், பீர் பாட்டில் போன்று வேடமிட்டு வந்து பிரசாரம் செய்தனர்.

பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை எஸ்.ஐ. மலர்விழி, தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் வழங்கினர். இதற்கான பிரச்சார வாகனத்தை இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!