குமாரபாளையம் நில முகவர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

குமாரபாளையம் நில முகவர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா
X

குமாரபாளையம் நில முகவர் சங்க புதிய பெயர் பலகையை இன்ஸ்பெக்டர் தவமணி திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நில முகவர்கள் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா, புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ஆயுத பூஜை விழா என முப்பெரும் விழா சார் பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.

சங்கத்தின் பெயர் பலகையை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி திறந்து வைத்து பேசினார்.

அப்போது நில முகவர்கள் பெரும்பாலும் 50 வயது கடந்தவர்களாகத்தான் உள்ளீர்கள். இந்த வயதானவர்கள் தங்களின் பெற்றோரை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவிடும். தற்போது குமாரபாளையம் பகுதிகளில் விபத்துக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தங்கள் அலுவலகங்கள் மற்றும் விற்பனை மையங்களில் கட்டாயம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும்.

அதை பெரும்பாலும் சாலையை நோக்கி அமைக்க வேண்டும். இதனால் விபத்துகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி சென்று விட்டாலும், கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும். கடந்து வாரம் நடைபெற்ற கொலை சம்பவத்தில் கூட நாங்கள் தற்கொலை தான் என்று முடிவு செய்த நிலையில், அருகில் இருந்த தொழிற்சாலையில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு அது கொலை என முடிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தோம் என தெரிவித்தார்.

வக்கீல் கருணாநிதி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். ஆடிட்டர் சரவணம் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். செயலர் செல்லமுத்து, பொருளர் சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture