குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவர் கைது

Salem Rowdy
X

Salem Rowdy

குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. சந்தியா, முருகேசன், உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

இதில் பள்ளிபாளையம் சாலை, சத்தியநாராயண மருத்துவமனை பகுதியில் வெள்ளை சீட்டில், சில எண்களை எழுதி, வெளி மாநில லாட்டரி சீட்டு என மூன்று நபர்கள் விற்றுக்கொண்டிருந்த போது கையும், களவுமாக பிடிபட்டனர். விசாரணையில், குமாரபாளையத்தை சேர்ந்த அங்கப்பராஜ், (43), ராமச்சந்திரன், (33), மணிகண்டன், (30), என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் குமாரபாளையம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இரு பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

குமாரபாளையம் கொத்துக்காரன்காடு பகுதியில் வசிப்பவர் கண்ணன், (38). சரக்கு வாகன ஓட்டுனர். இவருக்கு நித்யா, (30), என்ற மனைவி, யோகஸ்ரீ, (8), பவிஸ்ரீ, (7), ஆகிய மகள்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் கண்ணன், இரவு 09:30 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, மனைவி மற்றும் இரு குழந்தைகள் காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து கண்ணன், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்து, காணாமல் போன மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார். இவரது மனுவின்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணனின் குடும்பத்தாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்