அரசு பெண்கள் பள்ளி சுற்றுச் சுவர் உயரத்தை அதிகரிக்கும் பணி தொடக்கம்

குமாரபாளையத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் உயரமாக்கும் பணி தொடங்கியுள்ளது.
குமாரபாளையத்தில் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் உயரமாக்கும் பணி தொடங்கியுள்ளது.
குமாரபாளையம் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் மாணவிகள் கழிப்பறைக்கு போகாமல் மாலை வீட்டுக்கு சென்றுதான் கழிவறைக்கு போகிறார்கள். இதனால் மாணவிகளுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படுகிறது. மாணவிகளின் சங்கடத்தை போக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக பொதுப்பணித்துறை அதிகாரி அவர்களுக்கு சுற்றுச்சுவர் உயர்த்தக்கோரி கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
இதற்கு அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் பணியை செயலாக்கத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவிகளின் நலன் கருதி விரைவில் இப்பள்ளியின் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என புதிதாக வந்த மாவட்ட கலெக்டர் உமாவிடம் பொதுமக்கள் மற்றும் மக்கள் நீதி மையத்தினர் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் பலனாக பொதுப்பணித்துறை சார்பில் பள்ளியின் சுற்றுச்சுவர் அளவீடு பணிகள் துவக்கப்பட்டன. இதனால் மாணவியர், பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu