கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
X

படவிளக்கம் : பள்ளிபாளையம் அருகே உண்டியல் உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவில்

பள்ளிபாளையம் அடுத்துள்ள வ.ஊ.சி. நகர் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள பணம் திருடப்பட்டது.

கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

பள்ளிபாளையம் அடுத்துள்ள வ.ஊ.சி. நகர் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, 30,000 ரூபாய் மதிப்புள்ள பணம் திருடப்பட்டது.

பள்ளிபாளையம் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள வ.ஊ.சி. நகர் பகுதியில், அருள்மிகு சமயபுரத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் கோவில் பூசாரி சரவணன்(47) என்பவர் வழக்கம் போல கோவில் பணிகளை முடித்துவிட்டு, நேற்று இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவிலை திறக்க வந்த கோவில் பூசாரி சரவணன், கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே சென்று பார்த்தார். உள்ளே இருந்த கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து கோவில் நிர்வாக குழுவினரிடம் தகவல் தெரிவித்தார். கோவிலில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பொழுது, அதில், 30 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் அதிகாலை இரண்டு மணி அளவில், கையில் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல் பூட்டை உடைத்து, கோவில் உண்டியலில் இருந்த பணத்தையும், உடைக்கப்பட்ட பூட்டுகளையும், ஒரு வெள்ளை துணிக்குள் மூட்டை கட்டிக்கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் கோவில் உண்டியலில் இருந்து, சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை பணம் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில் நிர்வாக குழுவினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபடும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான, பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் மூன்று நபர்கள் உள்ளே புகுந்து , கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!