பழைமையான ஆஞ்சநேயர் கோவிலை கண்டுபிடித்த பொதுமக்கள்
படவிளக்கம் : குமாரபாளையம் பாலக்கரை, காவிரி கரையோரப் பகுதியில் பொதுமக்களால் பழமையான ஆஞ்சநேயர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைமையான ஆஞ்சநேயர் கோவிலை கண்டுபிடித்த பொதுமக்கள்
குமாரபாளையம் பாலக்கரை, காவிரி கரையோரப் பகுதியில் பொதுமக்களால் பழமையான ஆஞ்சநேயர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் பாலக்கரை, அப்புராயர் சத்திரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைகுட்பட்ட ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் அமைக்கபட்டது என கூறப்படுகிறது. கோவில் வளாகம் முழுதும் சேதமான நிலையில் உள்ளது. இதனை பராமரிக்க கோரி தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இதே பகுதியில் நேற்று பொதுமக்கள் சிதிலமடைந்த மற்றுமொரு ஆஞ்சநேயர் கோவிலை கண்டுபிடித்தனர். அப்பகுதி பெண்கள் கோவிலை தூய்மை படுத்தி, அங்குள்ள ஆஞ்சநேயர் திருவுருவச்சிலைக்கு பல அபிஷேகங்கள் நடத்தி, பூக்களால் அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர். அரசு சார்பில் இந்த கோவிலை புனரமைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்டச் செயலாளர் சபரிநாதன் கூறியதாவது:
குமாரபாளையம் தாலுகா பகுதியில் தற்போது புதிதாக மக்களின் கண்களுக்கு தென்பட்டுள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் திருக்கோவில் திருக்கோவில் பொதுமக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறை வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது இதே போன்று பல நூறு ஆண்டு பழமையான திருக்கோவில் இந்த பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் உள்ளது. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் குமாரபாளையம் பகுதியில் திரும்பும் இடம் எல்லாம் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலாக தற்போது தென்பட்டு வருகிறது. திருக்கோவிலில் ஆஞ்சநேயர் விக்ரகம் மட்டும் இருந்து வருகிறது. திருக்கோவிலில் ஏதேனும் விக்ரகம் இருந்ததா என்று சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்து திருக்கோவிலை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu