/* */

கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த போலீசார்..!

கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்து குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

HIGHLIGHTS

கார் உரிமையாளருக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்த போலீசார்..!
X

பள்ளிபாளையத்தில் காருக்குள் ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்ட மெக்கானிக் வெற்றிவேல்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே போகாத ஊருக்கு, கார் ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி சேலம் நகர டிராபிக் போலீசார் சார்பில் அபராதத் தொகை குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வசிப்பவர் வெற்றிவேல். இவர் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.. இந்நிலையில் இவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை தனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.. அதில் சேலம் சாலையில் காரில் செல்லும் பொழுது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாக குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மேலும் அதில் வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வெற்றிவேல் கடந்த ஒரு வார காலமாகவே வெளியில் எங்கும் செல்லாமல் கார் தனது வீட்டின் வெளியிலேயே நிறுத்தி வைத்துள்ளார்.. இந்த நிலையில் சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் மூலம் இந்த அபராத தொகை குறுஞ்செய்தி எதன் அடிப்படையில் தனக்கு அனுப்பப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என புரியாமல் வெற்றிவேல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெற்றிவேல் கூறும் பொழுது கடந்த ஒரு வார காலமாகவே என்னுடைய காரை நான் எங்கும் எடுத்துச் செல்லவில்லை... வீட்டிலேயே தான் கார் நிற்கிறது.. அப்படி இருக்கும் பொழுது இந்த அபராத தொகை எதன் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது என்பது எனக்கு புரியவில்லை.. மேலும் பொதுவாக கார் ஓட்டுநர்கள் சீட் பெல்ட் அணியவில்லை! இன்சூரன்ஸ் இல்லை என பல்வேறு விதங்களில் அபராத விதித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு போடவேண்டிய ஹெல்மெட்டுக்கான அபராத தொகையை, கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்திருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.. செல்லாத ஊருக்கு போகாத பயணத்திற்கு நான் ஏன் ஆயிரம் ரூபாய் அபராத தொகை கட்ட வேண்டும்!? போக்குவரத்து போலீசாரின் மெத்தன போக்கால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.. போலீசாரின் அலட்சியப் போக்கால் கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் டிராபிக் போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...


Updated On: 1 Jun 2023 4:15 AM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
 2. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
 4. ஈரோடு
  பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
 5. ஈரோடு
  கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
 6. ஈரோடு
  ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
 7. ஈரோடு
  பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
 9. நாமக்கல்
  வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
 10. கரூர்
  கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...