விபத்துக்களை தவிர்க்க தடுப்புகள் அமைக்க பாமக கோரிக்கை

விபத்துக்களை தவிர்க்க தடுப்புகள்   அமைக்க பாமக கோரிக்கை
X

விபத்துக்களை தவிர்க்க தடுப்புகள்அமைக்க பா.ம.க. கோரிக்கை

பள்ளிபாளையம் அருகே விபத்துக்களை தவிர்க்க தடுப்புகள் அமைத்திட பாமக. வினர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்

பள்ளிபாளையம் அருகே விபத்துக்களை தவிர்க்க தடுப்புகள் அமைத்திட பா.ம.க. வினர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனை தடுக்க பா.ம.க. வினர் திருச்செங்கோடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், வெப்படை சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுத்திடும் வகையில், நெடுஞ்சாலையில் தேங்கிடும் மணலை அகற்றி நிரந்தரமாக மணல் தேங்காத அளவிலும் சாலையை சீரமைத்திட வேண்டும், நெடுஞ்சாலையில் மைய தடுப்பு சுவர்களின் இடையே எதிரொளிப்பு பலகையை அனைத்து இடங்களிலும் அமைத்திட வேண்டும்.

தேவையற்ற இடங்களில் சாலையை பொதுமக்கள் கடந்து செல்வதை தடுத்திடவும், வெப்படையிலிருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் எலந்தகுட்டை அரசு மருத்துவமனை தாண்டியுள்ள குறுகிய வளைவு அருகே வேகத்தடை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கை மனுவினை மாவட்ட செயலர் சுதாகரன் வழிகாட்டுதலில், பா.ம.க பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் வழங்கினர். இதில், நிர்வாகிகள் செந்தில்குமார், மகாலிங்கம், சந்தோஷ், அருண்குமார், சுரேஷ் அருள், மதிவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai in future agriculture